வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (13:13 IST)

ஆன்மீக தலத்தில் சீருடை அராஜகம்: ஆன்மீக அரசியல்வாதி எங்கே?

ஆன்மீக தலத்தில் சீருடை அராஜகம்: ஆன்மீக அரசியல்வாதி எங்கே?
காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது  நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பல நாட்கள் பட்டினி போட்டு, மயக்க மருந்து கொடுத்து, தொடர்ந்து பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். 
 
இந்த விவகாரத்தில் போலீஸாரும் உடைந்தையாக இருந்துள்ளனர் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், இந்த வழக்கில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் 18 வயது நிரம்பாத சிறுவர்கள். 4 பேர் போலீஸ்கள். இவர்கள் அனைவரும் பாஜக கட்சியிலும், ஆர்எஸ்எஸ், ஹிந்துத்துவா அமைப்பிலும் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஆன்மீக தலத்தில் சீருடை அராஜகம்: ஆன்மீக அரசியல்வாதி எங்கே?
இந்த பலாத்கார சம்பவத்திற்கு எதிராக நாடே கொந்தளித்துள்ளது. #JusticeForAshifa என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கருத்து தெரிவித்த நிலையில், ஆன்மீக அரசியல்வாதி ரஜினியை இணையவாசிகள் தேடி வருகின்றனர். 
 
சீருடையில் உள்ள காவலரை தாக்குவது வன்முறையின் உச்சம் என சில நாட்கள் முன்பாக திடீரென சீறினார் ரஜினிகாந்த். ஆனால், சீருடையில் காவலர்கல் சிறுமியை பலாத்காரம் செய்தது அவரது கண்ணுக்கு தெரியவில்லையா? அதுவும் கோவிலில் வைத்து இவ்வாறு செய்திருப்பது அவரது கவனத்திற்கு செல்லவில்லையா என இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 
 
ஆன்மீக அரசியலை முன்னெடுக்கும் ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் மவுனம் கலைவது அவசியமாக உள்ளது.