திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (09:00 IST)

17 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக எம்.எல்.ஏ கைது

உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் 17 வயது மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் என்பவரை நீதிமன்றத்தின் கடும் கண்டனம் காரணமாக சிபிஐ கைது செய்துள்ளது.
 
உபி மாநிலத்தில் 17 வயது மாணவி ஒருவரை பாஜக எம்.எல்.ஏ செங்கர் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு பாலியல் வன்முறை செய்தனர். இதுகுறித்து அந்த மாணவி காவல்நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ என்பதால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
 
இந்த நிலையில் தனது மகளுக்கு நடந்த கொடுமைக்கு நீதிவேண்டும் என்று வலியுறுத்தி உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடு முன் மாணவியின் தந்தை தற்கொலை செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த உபி போலீசார் அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
 
அப்போது மாணவியை பாலியல் வன்முறை செய்த பாஜக எம்.எல்.ஏவின் ஆட்கள் காவல்நிலையத்திற்குள் புகுந்து மாணவியின் தந்தையை தாக்கினர். இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த விஷயம் சூடுபிடிக்கவே வேறு வழியின்றி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
 
இதனிடையே இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு ஏற்ற அலகாபாத் ஐகோர்ட், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக எம்.எல்.ஏவை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியது. இதனையடுத்து இன்று அதிகாலை 
புகாருக்குள்ளான பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் காவல்துறையினர்களால் கைது செய்யப்பட்டார். இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.