புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 29 மே 2024 (13:27 IST)

மோடி பிரதமராக வருவாரா.? POLITICAL கேள்வி கேட்காதீங்க..! நோ கமெண்ட்ஸ்..!

மோடி பிரதமராக வருவாரா.? POLITICAL கேள்வி கேட்காதீங்க..! நோ கமெண்ட்ஸ்..!
மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறுவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், மன்னிக்கவும். அரசியல் கேள்விகள் வேண்டாமே என நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.
 
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்று  இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், மீண்டும் மீண்டும் இமயமலை பயணம் செல்வது எப்படி இருக்கிறது? என கேள்வி எழுப்பப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்கிறேன் என்றும் இந்த முறை கேதர்நாத், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்கும் செல்ல உள்ளேன் என்றும் தெரிவித்தார். மக்களவை தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக வருவாரா என்ற கேள்விக்கு, “சாரி, அரசியல் கேள்வி கேட்காதீங்க” என்றார். இசையா, கவிதையா என்ற போட்டி குறித்த கேள்விக்கு, “நோ கமெண்ட்ஸ்” என பதிலளித்து மகிழ்ச்சியுடன் சென்றார்.

 
தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்குச் சென்று வருவதை நடிகர் ரஜினிகாந்த் வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.