திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 16 மார்ச் 2024 (21:15 IST)

இயேசுவை தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது- விஜய் ஆண்டனி

நான் என்ற படத்தில்  நடிகராக அறிமுகமான  இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அடுத்து, சலீம், பிச்சைக்காரன் உள்ளிட்ட பல  படங்களில் நடித்துள்ளார்.
 
இதையடுத்து, விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ரோமியோ. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாளினி நடித்துள்ளார்.   விநாயகக் வைத்திய நாதன் இயக்கியுள்ள இப்படத்திற்கு பரத் தனசேகர் இசையமைத்துள்ளார்.  
romeo-vijay antony
ரோமியோ படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது நடிகர் விஜய் ஆண்டனி இயேசு பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். 
 
இதற்கு கிறிஸ்தவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து அவர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
 
இதுதொடர்பாக விஜய் ஆண்டனி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
 
''அன்பார்ந்த கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் உறுப்பினர்களே, வணக்கம் A நான் முன்தினம் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான், தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசு பிரான் பயன்படுத்தி இருக்கிறார், என்று கூறி இருந்தேன்.
 
ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளைத் தொடர்ந்து, நான் பேசியதை இணைத்து, தவறாக அர்த்தபடுத்தியதால், உங்களைப்போன்ற சிலர் மனம் புண் பட்டிருக்கிறீர்கள்
 
என்பது, எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.
 
மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்ப்பட்ட இயேசுவைப்பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது''என்று தெரிவித்துள்ளார்.