உயரப்போகிறதா ஆட்டோ கட்டணங்கள்..?
பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உயர்வில்லை என்பதால் இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 110.85 எனவும், இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100.84 எனவும் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் 10 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது.
இந்நிலையில் பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆட்டோக்களில் பொருத்தியுள்ள மீட்டர்கள் செயல்படுகிறதா என ஆய்வு செய்ய போக்குவரத்து துறை, காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.