வாரம் தோறும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தம்!
தமிழகத்தில் இதுவரை 91% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 73% பேர் 2 தவணை தடுப்பூசியும் போட்டுள்ளதால் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க வாரம் தோறும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது. இதுவரை 27 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் வாரம் தோறும் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 91% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 73% பேர் 2 தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.
இதனால் இந்த வாரம் முதல் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே இனி வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் கிடையாது. இது தவிர அனைத்து மருத்துவமனைகளிலும் தொடர்ந்து தடுப்பூசி வழங்கப்படும். தமிழகத்தில் போதிய அளவில் தடுப்பூசி இருப்பு உள்ளது. கொரோனா புதிய உருமாற்றத்தை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.