வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 26 ஜூன் 2019 (20:47 IST)

தங்க தமிழ்ச்செல்வனை தூக்கிடாதீங்க: தினகரனுக்கு குவியும் வேண்டுகோள்கள்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை இதுவரை எதிர்க்கட்சிகள் கூட செய்யாத கடுமையான விமர்சனத்தை தங்க தமிழ்ச்செல்வன் செய்ததால் அவர் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டவுடன் அதிமுக அல்லது திமுகவில் அவர் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்த்ன.
 
ஆனால் ஒரு கட்சியின் பொதுச்செயலாளரை கடுமையாக விமர்சனம் செய்தது மட்டுமின்றி முடிந்தால் என்னை கட்சியில் இருந்து தூக்குங்கள் என்று சவால் விட்டும், டிடிவி தினகரன் அமைதியாக எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
 
இந்த நிலையில் டிடிவி தினகரனின் அமைதிக்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. ஜெயலலிதா மறைந்ததில் இருந்து சசிகலாவுக்கு விஸ்வாசமாக இருந்தவர், அதிமுகவில் தினகரன் அணி தோன்றியதில் இருந்து தினகரனின் வலது கரமாக இருந்தவர் என்றும், எனவே அவரை எந்த காரணத்தை கொண்டு கட்சியில் இருந்து நீக்க வேண்டாம் என்றும், கொஞ்சம் இந்த விஷயத்தை ஆறப்போட்டுவிட்டால் அவராகவே மனம் திருந்தி மன்னிப்பு கேட்பார் என்றும் அமமுகவினர் நிர்வாகிகள் டிடிவி தினகரனுக்கு போன் மேல் போன் போட்டு வேண்டுகோள் விடுத்து வருகின்றார்களாம். அதனால்தான் தினகரன், தங்க தமிழ்ச்செல்வனை இன்னும் நீக்கவில்லை என கூறப்படுகிறது.