1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 26 ஜூன் 2019 (15:18 IST)

நெருப்பை கக்கும் கழகத்தினர்; தங்க தமிழ்செல்வன் விஷயத்தில் அதிமுகவின் நிலைபாடு என்ன?

அமமுகவில் இருந்து விரைவில் நீக்கப்பட உள்ள தங்க தமிழ்செல்வனை அதிமுகவில் இணைத்துக்கொள்ள கூடாது என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
தங்க தமிழ்செல்வன் - டிடிவி தினகரன் முட்டல் மோதல் நேற்று வெட்ட வெளிச்சமாகி ஒரு முடிவுக்கும் வந்துவிட்டது. அமமுகவில் அடிப்படை உறுப்பினர், தேனி மாவட்ட செயளாலர், அமமுக கொள்கை பரப்பு செயளாலர் என அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டு தங்க தமிழ்செல்வன் கட்சியை விட்டு நீக்கப்படுவார் என தினகரன் அறிவித்தார். 
 
இந்நிலையில், தங்க தமிழ்செல்வனை கட்சிக்குள் சேர்க்க கூடாது என அதிமுகவினர் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், கட்சிக்கு துரோகம் செய்த தங்க தமிழ்செல்வனை கழகத்தில் இணைக்காதே... ஜெயலலிதா ஆட்சியை அழிக்க நினைத்த துரோகி தங்க தமிழ்செல்வன்... அம்மா ஆன்மா தங்க தமிழ்செல்வனை ஒரு போதும் மன்னிக்காது என எழுதப்பட்டுள்ளது. 
தேனியில் ஓபிஎஸ்க்கு இருக்கும் செல்வாக்கை தகர்க்க தங்க தமிழ்ச்செல்வன் உதவுவார் என தங்க தமிழ்ச்செல்வனை அதிமுக இணைக்க ஈபிஎஸ் ஆர்வம் காட்டி வருகிறார் என செய்தி வெளியான நிலையில் தங்க தமிழ்செல்வனுக்கு கழகத்திற்குள் எதிர்ப்பு அதிகம் இருப்பது இந்த போஸ்டர் மூலம் தெரியவருகிறது. 

தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைய உள்ளார் என செய்திகள் வெளியானதையடுத்து அவர் திமுக மற்றும் அதிமுக என எந்த கட்சியிலும் நான் சேரவில்லை என விளக்கம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.