வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 26 ஜூன் 2019 (18:02 IST)

செந்திலுக்கு இருந்த தெளிவு தங்கத்துக்கு இல்லாம போச்சே... எல்லாம் நேரம்?

செந்தில் பாலாஜிக்கு இருந்த தெளிவு தங்க தமிழ்செல்வனுக்கு இல்லாமல் போய்விட்டதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் வருத்தம் தெரிவிக்கின்றன. 
 
தங்க தமிழ்செல்வன், டிடிவி தினகரனின் போக்கை விமர்சித்து அமமுக உறுப்பினர் ஒருவருடன் பேசிய ஆடியோ வெளியாகி அமமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய சூட்டோடு டிடிவி தினகரன் கூட்டத்தை கூட்டி தங்க தமிழ்செல்வன் கட்சியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் என அறிவித்தார். 
 
சோ தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைவார் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கு அதிமுகவில் எதிர்ப்புகள் நிறைய உள்ளது. எனவே இப்போது அந்த ஒரு வழியும் இல்லாமல், நான் எந்த கட்சியிலும் சேரப்போவது இல்லை என அவரே கூறும்படி ஆகிவிட்டது. 
ஆனால், ஒரு கட்சியை எதிர்க்கும் போது எப்படி எதிர்க்க வேண்டும் என தங்க தமிழ்செல்வன் செந்தில் பாலாஜியிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். அமமுகவின் மீது சர்ச்சைக்குள்ளாகும் வகையில் எந்த விமர்சங்களை முன்வைக்காமல் கட்சி பணிகளில் இருந்து மெது மெதுவாக விலகி, நேரம் பார்த்தௌ திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி. 
 
திமுகவில் இணைந்த 41 நாட்களில் கரூர் மாவட்ட பொறுப்பாளரானார். அதனை தொடர்ந்து அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளானார். தேர்தலில் வெற்றி பெற்று இப்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார். கட்சிக்குள்ளும் அவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. 
ஆனால், தங்க தமிழ்செல்வன் சற்றும் சிந்திக்காமல் வார்த்தைகளை விட்டு இப்போது எக்கட்சியின் ஆதரவும் இன்றி இப்போது தனித்து நிர்கிறார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் வருத்தம் தெரிவிக்கின்றன.