திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (14:31 IST)

போர் வரும்போதுதான் ரஜினி பேசுவார், மெர்சலுக்காக பேசமாட்டார்: சீமான்

இளையதளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை கடந்த இரண்டு நாட்களாக தேசிய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது. ராகுல்காந்தி காந்தி முதல் உள்ளூர் அரசியல்வாதிகள் வரையும், கமல்ஹாசன் முதல் சின்ன நடிகர் வரையும் மெர்சலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவதால் பாஜக தலைவர்கள் விழிபிதுங்கி உள்ளனர்.



 
 
இந்த நிலையில் இந்த களேபேரத்திலும் ரஜினியும் அஜித்தும் அமைதியாக உள்ளனர். அஜித்தாவது எதற்குமே கருத்து தெரிவிக்க மாட்டார் என்பதால் அவரை விட்டுவிடலாம், ஜிஎஸ்டிக்கு முதலில் ஆதரவு தெரிவித்த ரஜினி 'மெர்சல்' பிரச்சனைக்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.
 
இந்த நிலையில் இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் சீமான், 'நடிகர் ரஜினிகாந்த் 'மெர்சல்' குறித்து பேசமாட்டார், அவர் போர் வரும்போது மட்டுமே பேசுவார் என விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ரஜினி ரசிகர்கள் 'மெர்சல்' பிரச்சனை குறித்து விஜய்யே இன்னும் வாயை திறக்கவில்லை, ரஜினி ஏன் குரல் கொடுக்க வேண்டும் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.