1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (10:10 IST)

மெர்சலுக்கு நானும் விரைவில் பணம் கொடுப்பேன். ப.சிதம்பரம்

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி, தேசிய தலைவர்களும் இதுகுறித்து பேச ஆரம்பித்துவிட்டனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மெர்சல் குறித்து ப.சிதம்பரம் தெரிவித்த கருத்தை விமர்சனம் செய்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ப.சிதம்பரம் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.



 
 
நேற்று தனது டுவிட்டரில் ப.சிதம்பரம் மெர்சல் குறித்து கூறியபோது, ','அரசின் கொள்கைகளை பாராட்டி மட்டுமே படம் எடுக்க வேண்டும் என சட்டம் வந்தாலும் வரலாம்' என கிண்டலாக கூறியிருந்தார்.  இதற்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'மெர்சல் படத்திற்கு ப.சிதம்பரம் பைனான்ஸ் செய்தாரா? என்று கேள்வி எழுப்பினார்.
 
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த ப..சிதம்பரம், 'மெர்சல் படத்தை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்ப்பவர்௧ள் ௭ல்லோரும் அந்த படத்திற்கு பணம் கொடுத்தவர்கள் தான். அந்த வகையில் மெர்சலுக்கு நானும் விரைவில் பணம் கொடுப்பேன்' என்று கூறியுள்ளார்.