1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (10:22 IST)

வெட்கமே இல்லாமல் எப்படி? - ஹெச்.ராஜாவை விளாசிய விஷால்

விஜய் நடித்த மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்ததாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருப்பதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் விஷால் போர்க்கொடி தூக்கியுள்ளார்.


 

 
மெர்சல் படத்தில் நடிகர் விஜய் ஜி.எஸ்.டி பற்றி பேசிய சில வசனங்கள் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்றோர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.  
 
அதைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி குறித்த வசனங்களை நீக்க முடிவெடுத்திருப்பதாக படத்தின் தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது.
 
இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் ‘அக்னிபரீட்சை’ என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஹெச்.ராஜா, மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்ததாக தெரிவித்தார்.
 
இது திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து ஹெச்.ராஜா பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கூறியுள்ளார்.
 
மக்கள் அறிந்த தலைவராக இருந்து கொண்டு ஹெச்.ராஜா எப்படி பைரசியை ஆதரிக்கிறார்? பைரசி எனும் திருட்டுக் குற்றத்தை அரசு அங்கீகரிக்கிறதா எனத் தெரியவில்லை.
 
ஒரு படத்தின் திருட்டுப் பிரதியை பார்ப்பது எதையும் யோசித்து முடிவெடுக்கும் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெட்கமே இல்லாமல் ஹெச்.ராஜா இப்படி கூறியிருப்பது ஒரு தவறான முன்னுதாரணம். திரைத்துறையினர் மனம் புண்பட்டுள்ளதால் ஹெச்.ராஜா பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். 
 
அதேபோல், பைரைசியை ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விஷால் கேட்டுக்கொண்டார்.