செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 30 செப்டம்பர் 2017 (04:28 IST)

முக்கிய போட்டிக்கு அம்பாசிடர் கமல் ஏன் வரவில்லை?

புரோ கபடி போட்டியில் கலந்து கொண்டுள்ள தமிழ் தலைவாஸ் அணிக்கு அம்பாசிடராக கமல்ஹாசன் நியமனம் செய்யப்பட்டது தெரிந்ததே. தமிழ் தலைவாஸ் அணியின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட கமல், அந்த நிகழ்ச்சியிலும் மறைமுகமாக அரசியல் பேசினார் என்பதும் தெரிந்ததே



 
 
இந்த நிலையில் நேற்று சென்னையில் முதன்முதலாக போட்டி நடந்தபோது அணியின் உரிமையாளர் சச்சின் மும்பையில் இருந்து வந்திருந்தபோதும், சென்னையில் இருந்த அம்பாசிடர் கமல்ஹாசன் வராததது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னையில் நடக்கும் முதல் கபடி போட்டி என்பதால் சென்னைவாசிகள் பலரும், நடிகர்களும் வந்திருந்தனர். ஆனால் கமல்ஹாசன் வராததற்கு காரணம், இந்த நிகழ்ச்சியில் ஓபிஎஸ் கலந்து கொண்டதால் இருக்குமோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது. ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்களை கடுமையாக விமர்சனம் செய்த கமல்ஹாசன் இந்த போட்டியில் கலந்து கொண்டால் ஓபிஎஸ் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று வரவில்லையா? அல்லது பிக்பாஸ் இறுதி நாள் நிகழ்ச்சிக்கு தன்னை தயார்படுத்தியிருந்தாரா? என்பதை அவர் தான் விளக்க வேண்டும்.