ஐந்து வினாடிகளில் ஆட்டத்தை மாற்றிய அஜய்தாக்கூர்: தமிழ் தலைவாஸ் அணி வெற்றி
புரோ கபடி போட்டி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை இரண்டு வெற்றிகளை மட்டுமே ருசித்துள்ள நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் மூன்றாவது வெற்றி பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி அபாரமாக விளையாடியது. ஒரு கட்டத்தில் தமிழ்தலைவாஸ் அணியும், இன்னொரு கட்டத்தில் பெங்கால் அணியும் மாறி மாறி முன்னணியில் இருந்தன
இந்த நிலையில் கடைசி ஐந்து வினாடி இருக்கும்போது பெங்கால் அணி 32 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 31 புள்ளிகளும் இருந்தன. கடைசி ரைடாக தமிழ் தலைவாஸ் அணி கேப்டன் அஜய்தாக்கூர் சென்று இரண்டு புள்ளிகளை பெற்றதால் தமிழ் தலைவாஸ் அணி 1 புள்ளி வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
தற்போது தமிழ் தலைவாஸ் அணி 12 போட்டிகள் விளையாடி 3 வெற்றியும் 7 தோல்வியும் 2 டிராவும் பெற்று 27 புள்ளிகள் பெற்றுள்ளது. அடுத்து வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.