1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 23 செப்டம்பர் 2017 (07:37 IST)

கமல்ஹாசன் எதற்கோ பயப்படுகிறார்? யாருக்கோ பயப்படுகிறார்? மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே தன்னை குழப்பி, மற்றவரையும் குழப்பி வருவதாக மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே கனகராஜ் கூறியுள்ளார். அவர் எதற்கோ, யாருக்கோ பயப்படுவதாகவும், அதன் தாக்கம் தான் அவரிடம் இருந்து வெளிப்படும் கருத்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.



 
 
நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் பேசிய கனகராஜ், 'இடது, வலது இன்றி மத்தியமாக தான் செயல்பட போவதாகவும், தன்னுடைய கட்சி ஒரு அதிமுக, திமுக, காங்கிரஸ் கலந்த கலவையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
 
இடதுசாரிகள் கொள்கைகள் வேறு, வலது சாரிகள் கொள்கைகள் வேறு அதேபோல் இவை இரண்டுக்கும் மத்தியில் உள்ள திராவிட கட்சிகளின் கொள்கைகள். இதில் கமல் கூறும் கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து பார்த்தால் அவர் யாருக்கோ, அல்லது எதற்கோ பயப்படுகிறார் என்றே தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.