வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 8 மே 2023 (09:11 IST)

நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்ன அவலம்: அதிர்ச்சி சம்பவம்..!

NEET
தமிழகம் உள்பட நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்ன அவலம் மயிலாப்பூர் நீட் தேர்வு மையத்தில் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பாக உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மயிலாப்பூரில் நீட் தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரின் உள்ளாடையை கழற்ற சொன்ன அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது பெரும் கண்டனத்திற்குரியது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
.

 மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்ன ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது


Edited by Siva