திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 8 மே 2023 (14:13 IST)

நீட் தேர்வுக்கு செல்ல தாமதம்.. ரோந்து வாகனத்தில் மாணவியை அழைத்து வந்த போலீஸ்..!

நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நீட் தேர்வு மையத்திற்கு செல்ல தாமதமானதை அடுத்து அந்த மாணவியை போலீசார் தங்கள் ரோந்து வாகனத்தில் கொண்டு வந்து விட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை ஆவடியில் உள்ள நீட் தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத தயாராக இர்ந்த மாணவி ஒருவர் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்தார். போக்குவரத்து டிராபிக் காரணமாக அவர் சென்ற வாகனம் காலதாமதம் ஆனது. இதனை அடுத்து அவர் ஒரு கட்டத்தில் அழுக தொடங்கினார். இதனை அடுத்து அந்த பகுதியை வழியாக வந்த காவல்துறையை ரோந்து வாகனம் அந்த மாணவியையும் அவரது பெற்றோர்களையும் தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்றனர். 
 
மேலும் போலீசார் வாக்கி டாக்கி மூலம் போக்குவரத்தையும் சரி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சரியான நேரத்தில் ஆவடியில் உள்ள நீட் தேர்வு மையத்திற்கு அவர் சென்றதை போக்குவரத்து காவலர்களுக்கு அந்த மாணவி மற்றும் அவருடைய பெற்றோர் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர் 
 
சரியான நேரத்திற்கு ஒரு நிமிடம் முன்பாக அந்த மாணவியை இறக்கிவிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
Edited by Siva