தொடர்புடைய செய்திகள்
- கார்த்திக் நடிக்கும் படத்தில் சன்னிலியோன் நடனம் !
- நல்ல நேரம் மிஸ் ஆயிட கூடாது; வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்னதாகவே வேட்பு மனு தாக்கல்!
- திமுக சார்பில் போட்டியிடும் 9 டாக்டர்கள்!
- அதிமுக, திமுக இல்லாத பக்கம் ஒதுங்கிய கமல்! – மய்யம் வேட்பாளர் பட்டியல்!
- சேப்பாக்கத்தில் உதயநிதி.. கொளத்தூரில் ஸ்டாலின்! – திமுக வேட்பாளர் முழு லிஸ்ட் இதோ!
கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டியா? ஓ இதுதான் காரணமா?
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
கமல்ஹாசன் இந்த தொகுதியை தேர்வு செய்ததற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. கோவை தெற்கு தொகுதியை திமுக காங்கிரஸுக்கும், அதிமுக பாஜகவுக்கும் கொடுத்துவிட்டது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் அங்கே பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. திமுக, அதிமுக நேரடியாக போட்டியிடாத தொகுதி என்பதால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது ஒரு காரணம். மற்றொரு காரணமாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 13 சதவீத வாக்குகளைக் கொடுத்த தொகுதி என்பதாலும் கமல் அந்த தொகுதியில் களமிறங்க உள்ளாராம்.
அடுத்த கட்டுரையில்
