செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 ஏப்ரல் 2020 (16:51 IST)

சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏன் அதிகரிக்கிறது?

சென்னையில் மட்டும் பாதிப்பு ஏன் அதிகரிக்கிறது என்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். 
 
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 673 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 
 
இந்நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்பு ஏன் அதிகரிக்கிறது என்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள், மற்ற மாவட்டங்களை விட சென்னையில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஊரடங்கு காலத்தை மக்கள் முறையாக கடை பிடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 
 
இதற்கு முன்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சென்னையில் மக்கள் தொகை அதிகம். சென்னையை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்து ஒன்றரைக்கோடி பேர் மக்கள் தொகை உள்ளது. நோயின் பரவல் அதிகம் என்பதால் சென்னையில் நோயைக் கட்டுபடுத்துவது சவாலான வேலைதான் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.