1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rajandra Balaji criticize Mk Stalin activities

விலகி இருக்க சொன்னால் ஒன்றிணைய அழைக்கிறார்! – பங்கம் செய்த ராஜேந்திர பாலாஜி!

Tamilnadu
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்வதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஒரு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசு பல நடவடிக்கைகளிம் முன்னெச்சரிக்கையாக செயல்படுவதில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வந்தார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் கருத்துகளுக்கு பதிலடியாக பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தொடர்ந்து அரசை குறை கூறும் எதிர்க்கட்சி தலைவரின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார். மேலும் “நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமரும், முதல்வரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஸ்டாலின் மட்டும் “ஒன்றிணைவோம் வா” என்று அழைத்து அரசியல் செய்கிறார்” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
#FactCheck: குணமானவர்களுக்கு அறிகுறியே இல்லாமல் மீண்டும் கொரோனா?