வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 29 ஏப்ரல் 2020 (15:50 IST)

தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு !

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெய்யில் நிலவுவுவதால் மக்கள் எப்போது மழை வரும் என எதிர்ப்பாத்துள்ளனர். விவசாயிகள் பருவமழையை நம்பி யுள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது :

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.