1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Why I Preferred Sinner TTV: Subramanian Swamy Tweet

பாவி தினகரனுக்கு ஏன் ஆதரவு?: சுப்பிரமணியன் சுவாமி டுவீட்!

டிடிவி தினகரன்
நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இவரது வெற்றி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் ஏன் டிடிவி தினகரனை ஆதரிப்பதற்கான காரணத்தை கூறியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
 
பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக கருத்துக்கள் கூறினார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட்டாலும், சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து தனது ஆதரவை டிடிவி தினகரனுக்கே தெரிவித்து வந்தார்.
 
இந்நிலையில் டிடிவி தினகரன் வெற்றிபெற்றதையடுத்து சுப்பிரமணியன் சுவாமி, தான் ஏன் டிடிவி தினகரனை ஆதரிக்கிறேன் என்பதற்கான காரணத்தை தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

 
ஆர்கே நகர் தொகுதியை சேர்ந்த பல வாக்காளர்கள், நான் ஏன் பாவியான டிடிவி தினகரனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக என்னிடம் கேட்கின்றனர். அதற்கு நான் அவர்கள் அனைவரும் ராமாயணத்தில் வாலியை விட, சுக்ரீவனுக்கு ராமர் ஏன் உதவி செய்தார் என்பதைப் படிக்க வேண்டும் என கூறியதாக கூறியுள்ளார். இங்கு சுப்பிரமணியன் சுவாமி தினகரனை சுக்ரீவனாக குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஆர்.கே.நகருக்கு நன்றி தெரிவிக்க தினகரன் செல்லவில்லை : இதுதான் காரணமா?