1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 27 டிசம்பர் 2017 (12:21 IST)

தினகரனுக்கு சம்மன் அனுப்பிய விசாரணை கமிஷன்; ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி?

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியானதை அடுத்து டிடிவி தினகரன் மற்றும் இளவரசி மகள் கிருஷ்ணபிரியா நேரில் ஆஜராக விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.

 
நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் அப்போலோ நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆர்.கே.இடைத்தேர்தலுக்கு முதல்நாள் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டார். 
 
இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, இந்த வீடியோ ஓரிஜினல் வீடியோவில் இருந்து சில நொடிகள் மட்டுமே வெட்டி எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
 
இதுவரை டிடிவி தினகரனிடன் விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தவில்லை. இந்நிலையில் வீடியோ வெளியானதை அடுத்து தினகரன் நேரில் ஆஜராக விசாரணை ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 
 
தினகரன் 7 நாட்களுக்கு ஆவணங்களையும், ஆதாரங்களையும் சம்ர்பிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கிருஷ்ணபிரியா வரும் 2ஆம் தேதி நேரில் ஆஜராகி ஜெயலலிதா வீடியோ குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 
ஜெ. சிகிச்சை வீடியோ, தினகரன் ஆர்.கே.நகரில் வெற்றிப்பெற காரணமாய் கருதப்படும் நிலையில் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது முதல்வர் எடப்படி தினகரனுக்கு வைக்கப்படும் செக்காக பார்க்கப்படுகிறது.