புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (09:04 IST)

காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் கொடுத்தது ஏன்? புது ரூட் எடுத்தது தான் காரணமா?

dmk congress
திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு ஆறு முதல் எட்டு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று திமுக பிடிவாதமாக இருந்த நிலையில் திடீரென பத்து தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது திமுகவின் மேலிட வட்டாரத்திற்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரமுகர்கள் சிலர் 10 தொகுதிகள் தராவிட்டால் புது ரூட் போட்டு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மேல் இடத்தில் சொன்னதாகவும் அதற்கு மேலிடமும் பச்சைக்கொடி காட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இதை அறிந்து கொண்ட திமுக, அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் சென்றால் இந்தியா கூட்டணி கேள்விக்குரியதாக மாறிவிடும் என்று முடிவு செய்ததாகவும் இதையடுத்து தான் வேறு வழியின்றி தான் காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகளை திமுக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

எப்படியோ காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற செல்வபெருந்தகை கடந்த முறை பெற்ற பத்து தொகுதிகளை பேசி பெற்றுவிட்டதை அடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Edited by Siva