ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 10 மார்ச் 2024 (18:02 IST)

திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்.? கமல் விளக்கம்.!!

Kamal Stalin
தேசத்திற்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும் என்றும் தமிழ்நாடு மற்றும் நாட்டின் நலனை காக்க எடுத்த முடிவு என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
தி.மு.க கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்  இணைந்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவை தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனினும் ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்தது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.
 
எதிர்வாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 
தேசத்திற்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும் என்றும் தமிழ்நாடு, தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.