திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (07:30 IST)

ஸ்டாலினுக்கு கூட்டம் வராது: கமல்ஹாசனை பிரச்சாரத்திற்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள்.. குஷ்பு

தேர்தல் பிரச்சாரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றால் கூட்டம் வராது என்றும் கூட்டத்தை வரவழைப்பதற்கு கமல்ஹாசனை பிரச்சாரத்திற்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்றும் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு பேட்டி ஒன்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி இடையே நடந்த உடன்பாட்டில் மக்களவைத் தேர்தலில் கமல் கட்சிக்கு சீட் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் கமல் கட்சிக்கு ஒரு சீட் உண்டு என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது குறித்து நடிகை குஷ்பு கூறிய போது கமல்ஹாசனுக்கு ஒரு மாநிலங்களவை சீட் மட்டுமே கொடுத்துள்ளார்கள், திமுகவில் பிரச்சாரம் செய்வதற்கு ஆள் இல்லை என்பதால் கமல்ஹாசன் போன்ற ஒரு பிரகாசமான முகம் திமுகவுக்கு தேவைப்படுகிறது என்று நினைத்து தான் முதல்வர் ஒரு மாநிலங்களவை சீட் கொடுத்துள்ளார், முதலமைச்சர் போனால் கூட்டம் வராது கூட்டத்திற்காக முதலமைச்சர், கமல்ஹாசன் பயன்படுத்துகிறார் என்று தெரிவித்துள்ளார்
 
மேலும் மோடி , அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா ஆகியோர் எங்கு போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன் என்றும் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய சொன்னாலும் இறங்கி பிரச்சாரம் செய்வேன் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.


Edited by Siva