வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (08:41 IST)

ராமதாஸ் மகள் வீட்டில் ரகசிய சந்திப்பு.. பாஜக கூட்டணியில் இணைகிறதா பாமக?

அதிமுக கூட்டணியில் கிட்டத்தட்ட பாமக இணைந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் திடீரென பாஜக உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும், சென்னையில் உள்ள ராமதாஸ் மகள் வீட்டில் எல் முருகன் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் ரகசியமாக பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக மற்றும் தேமுதிக எந்த கூட்டணியில் சேர இருக்கிறது என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் இரு கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை கிட்டத்தட்ட முடித்து விட்டதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அதிமுகவில் பாமக இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் திடீரென மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரும் தனியார் ஹோட்டலில் முதலில் சந்தித்ததாகவும் அதன் பின்னர் திடீரென  ராமதாஸ் மகள் இல்லத்தில் ரகசிய சந்திப்பு நடத்தியதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த பேச்சு வார்த்தையின் போது ஓபிஎஸ் அணியினர்களும் இருந்ததாக தெரிகிறது. இதனால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Siva