1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Who is vishal asked Abirami Ramanathan

எங்களுக்கு கட்டளையிட விஷால் யார்? அபிராமி ராமநாதன்

vishal
திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணம், இலவச பார்க்கிங், கேண்டீன்களில் விற்கப்படும் பொருட்களை எம்.ஆர்.,பியில் விற்க வேண்டும், அம்மா குடிநீர் விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்பட சில விஷயங்களை நேற்று விஷால் தெரிவித்தார்



 
 
இந்த நிலையில் இதுகுறித்து அதிருப்தி அடைந்த திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிலையில் சற்றுமுன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய திரையரங்கு உரிமையாளர் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் கூறியபோது, 'எங்களுக்கு கட்டளையிட விஷால் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்
 
விஷால் கூறும் கருத்துக்கள் சரியானவை என்றாலும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கட்டளையிடுவது போல் விஷால் பேசுகிறார்; யாரும் யாருக்கும் முதலாளி கிடையாது என்பதை அவர் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும் என்று அபிராமி ராமநாதன் கூறியுள்ளார். 
 
மேலும் 16 ஆண்டுகளுக்கு பின் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ராமநாதன், கட்டண உயர்வுக்கு அதிகாரிகள் ஒத்துழைக்க மறுத்த நிலையிலும், முதல்வர் ஈபிஎஸ், அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜூ எங்கள் பிரச்சனைகளை நீக்கினர் என்றும் அவர்களுக்கு எங்களது நன்றி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
About Writer
sivalingam
அடுத்த கட்டுரையில்
பெண்களை அனுமதிக்க சபரிமலை என்ன செக்ஸ் டூரீஸ்ட் இடமா? தேவசம்போர்டு தலைவர்