1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (11:40 IST)

நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளர் யார்.? திமுக அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

Mayor Kittu
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்ற கிட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். 
 
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில், 51 வார்டுகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 

பின்னர் நெல்லை மாநகராட்சி மேயராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிலிருந்து இவர் மீது திமுக கவுன்சிலர்கள் பலர் தொடர் குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
 
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டும், மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாததால், தீர்மானம் கைவிடப்பட்டது. இதையடுத்து மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்தார்.
 
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் திமுக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
 
Mayor
இந்நிலையில் நெல்லை  மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்கிற கிட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை காலை 10.30 மணிக்கு மறைமுக மேயர் தேர்தல் நடைபெற உள்ளது.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிட்டு, நெல்லை மாநகராட்சியின் 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆவார். மேலும், இவர் 1980 முதல் திமுக உறுப்பினராகவும், 2வது முறை கவுன்சிலராகவும் உள்ளார். அதேநேரம், 5 முறை திமுக வட்டச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.