ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (10:31 IST)

முதலமைச்சர் குறித்து அவதூறு..! சென்னையில் பாஜக முக்கிய பிரமுகர் கைது..!!

BJP Arrest
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவரை போலீசார் கைது செய்தனர்.
 
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் விதமாக இழிவாக கருத்துகளை தெரிவிக்கும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாஜக வட சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் இன்று காலை பெரவள்ளூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கடந்த ஒன்றாம் தேதி பாஜக சார்பில் பெரவள்ளூர் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய கபிலன், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று காலை சென்னை வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கபிலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.