திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 8 பிப்ரவரி 2020 (19:56 IST)

ரஜினி நடிப்போடு நிறுத்திக்கொள்வது நல்லது - தா. பாண்டியன்

ரஜினி நடிப்போடு நிறுத்திக்கொள்வது நல்லது தா பாண்டியன்
ரஜினி நடிப்புடன் நிறுத்திக் கொள்ளுவது நல்லது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலர் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினி, இந்தியக் குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.
 
இதற்கு சில எதிர்கட்சி தலைவர்கள் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலர் தா. பாண்டியன் கூறியுள்ளதாவது : இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுக்க ரஜினி யார் ? முதல் குரலும் வேண்டாம் ! கடைசி குரலும் வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
 
மேலும், ரஜினி நடிப்பதோடு நிறுத்திக்கொள்வது நல்லது ;  நாட்டில் எத்தனை மாநிலங்கள் இருக்கிறது என்பது கூட அவருக்குத் தெரிகிறது; பட்ஜெட்டிற்கு எவ்வளவு  நிதி ஒதுக்கப்படுகிறது என்பது ரஜினிக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.