வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 7 ஆகஸ்ட் 2021 (16:43 IST)

அதிமுகவின் அடுத்த அவைத்தலைவர் யார்? சீனியர்களுக்குள் நடக்கும் போட்டி!

அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் சில நாட்களுக்கு முன்னர் காலமானார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை 18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட மதுசூதனன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அதிமுகவினர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்தனர். இப்போது அவர் வகித்து வந்த அவைத்தலைவர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த போட்டியில் முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் தமிழ் மகன் உசேன்,பா.மோகன் ஆகியோர் உள்ளதாக சொல்லப்படுகிறது.