1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (19:19 IST)

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார் 
 
இதனை அடுத்து அதிமுக கொடிகள் அரைக்கம்பத்தில் வைக்கப்பட்டுள்ளன என்றும் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மறைந்த அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நாளை இறுதிச்சடங்கு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் மதுசூதனன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் மதுசூதனன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது
 
அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் இயற்கை எய்திய செய்தி கேட்டு வருத்தமுற்றேன். இளவயதிலேயே புரட்சித்தலைவரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். சுமார் அறுபதாண்டு கால அரசியல் அனுபவம் கொண்டவர்.மதுசூதனனின் குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.