1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin pays final tribute to Madhusuthnan

மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மதுசூதனன் உடல்
சென்னை தண்டையார்பேட்டையில் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

 
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேற்று காலமானதை அடுத்து அவருக்கு இரங்கல் அறிக்கை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார். அதில் அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும் துயரத்துக்கும் உள்ளானேன் என்றும் அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார். 
 
இந்நிலையில் இன்று சென்னை தண்டையார்பேட்டையில் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தினர். சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை 18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட மதுசூதனன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அடுத்த கட்டுரையில்
கடைக்கு செல்லும்போது கூட சான்றிதழை எடுத்து செல்ல வேண்டும்: கேரள அரசு நிபந்தனை