செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 ஜூன் 2019 (08:45 IST)

யாகம், போராட்டம், ஊடகங்களின் பொறுப்பின்மை: எங்கே போகிறது தமிழ்நாடு?

தமிழக மக்கள் தண்ணீர் கஷ்டத்தில் தவித்து கொண்டிருக்கும் நிலையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, மழைக்காக யாகம் செய்து வருகிறது. ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க வேண்டிய எதிர்க்கட்சி, மக்களுக்கு தொல்லை தரும் வகையில் போராட்டம் செய்து வருகிறது. குறிப்பாக திங்கட்கிழமை காலையில் போராட்டம் நடத்துவதால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதையெல்லாம் சுட்டிக்காட்ட வேண்டிய முன்னணி செய்தி ஊடகங்கள் நடிகர் சங்க தேர்தலையும், பிக்பாஸ் நிகழ்ச்சியையும் வளைத்து வளைத்து செய்திகளையும் விவாதங்களையும் ஒளிபரப்பி வருகின்றனர். இளைஞர்கள் ஒருபக்கம் 'வண்டுமுருகன் அஜித்' மற்றும் 'கைப்புள்ள விஜய்' போன்ற ஹேஷ்டேக்குகளை டிரெண்டுக்கு கொண்டு வருவதில் மும்முரமாக உள்ளனர். இப்படியே போனால் தமிழகம் என்ன நிலைக்கும் ஆகும் என உண்மையான சமூக நல ஆர்வலர்கள் கவலை கொண்டுள்ளனர்.
 
சீரியஸாக எடுக்க வேண்டிய தண்ணீர் பிரச்சனை உள்பட பல பிரச்சனைகளை நமது மக்களும் அரசியல்வாதிகளும் விளையாட்டாக கூட எடுத்து கொள்வதில்லை. விளையாட்டாக எடுத்து கொள்ள வேண்டிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து சீரியஸாக விவாதம் செய்து வருகின்றனர். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது தமிழகம் பின்னோக்கி செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்றே தோன்றுகிறது