கல்வெட்டை கடப்பாறையால் உடைப்பேன் – நடிகர் ஆனந்தராஜ் எச்சரிக்கை

anandaraj
Last Modified ஞாயிறு, 23 ஜூன் 2019 (14:02 IST)
நடிகர் சங்கத்திற்காக கட்டப்படும் கட்டிடத்தில் வைக்கப்படும் கல்வெட்டை கடப்பாறையால் உடைப்பேன் என நடிகர் ஆனந்தராஜ் பேசியிருப்பது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இன்று நடைபெற்று வரும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பல நடிகர், நடிகையர் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்கியராஜ் அணியிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிடுகின்ற்னர். மயிலாப்பூர் புனித எப்பாஸ் கல்லூரியில் நடக்கும் இந்த தேர்தல் மாலை 5 மணிவரை நடைபெறும்.

இதில் தற்போது வாக்களித்து விட்டு வந்த நடிகர் ஆனந்தராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “நல்லது செய்யும் அணி கண்டிப்பாக வெற்றிபெறும். யார் வெற்றிபெற்றாலும் நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டப்படும். கட்டிடம் கட்டி முடித்த பிறகு கல்வெட்டு வைக்கும்போது “தென்னிந்திய நடிகர் சங்கம்” என்று மட்டுமே வைக்க வேண்டும். இன்னார் திறந்தார், அவர் திறந்தார், இவர் திறந்தார் என கல்வெட்டில் ஏதாவது எழுதியிருந்தால், ஒரு கடப்பாறையை கொண்டு வந்து நானே அந்த கல்வெட்டை உடைத்து நொறுக்கி விடுவே. ஏனென்றால் இந்த கட்டிடம் கட்டும் முயற்சியில் அனைத்து நடிகர்களின் பங்கும் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இன்னும் தேர்தலே முடியவில்லை, கட்டிடம் கட்ட தொடங்கவே இல்லை அதற்குள் கடப்பாறை வைத்து இடிப்பேன் என ஆனந்தராஜ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :