”அது நாடகமா… இது நாடகமா…?” – அல்வா கொடுத்த எஸ்.வி.சேகர்

s ve sekar
Last Modified ஞாயிறு, 23 ஜூன் 2019 (13:30 IST)
முதலில் நடிகர் சங்க தேர்தல் நடக்க இருந்த இடத்தில் நாடகம் வைப்பதாக இருந்த எஸ்.வி.சேகர் தற்போது அந்த இடத்தை மாற்றியுள்ளார். இவர் வேண்டுமென்றே இப்படி செய்கிறார் என கடுப்பில் இருக்கின்றனர் நடிகர் சங்க உறுப்பினர்கள் சிலர்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23 நடைபெறும் என நடிகர் சங்கம் முடிவு செய்து தேர்தலுக்கு எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியை தேர்வு செய்தது. ஆனால் அந்த தேதியில் எஸ்.வி.சேகர் அந்த கல்லூரியை தனது “அல்வா” நாடகத்துக்காக முன்பதிவு செய்திருப்பதாக கட்டையை போட்டார். அவர் ரசீதை வைத்துக்கொண்டு பிரச்சினையை கிளப்ப நடிகர் சங்கத்தினருக்கும் தேர்தல் நடத்துவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன.

கடைசியாக நீதிமன்றம் சொன்ன தேதியில் தேர்தல் நடக்க உத்தரவிய்யதுடன், மயிலாப்பூர் புனித எப்பாஸ் கல்லூரியில் தேர்தல் நடத்த அனுமதித்தது. இந்நிலையில் தேர்தல் இடம் மாறியதும் தன் நாடகத்தையும் இடம் மாற்றியுள்ளார் எஸ்.வி.சேகர். மேலும் “அல்வா” என்ற நாடகத்தின் தலைப்பை “காமெடி தர்பார்” என மாற்றி தியாகராஜர் அரங்கில் நடத்துகிறார்.

நடிகர் சங்க தேர்தலுக்கு இடையூறு செய்யவே எஸ்.வி.சேகர் இப்படி செய்கிறார் என குறைப்பட்டு கொள்கிறார்கள் நடிகர் சங்க தரப்பினர்.இதில் மேலும் படிக்கவும் :