1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (22:05 IST)

கஜா புயல் நிவாரணம்: எங்கே சென்றார்கள் தமிழ்ப் போராளிகள்?

ரஜினிகாந்த் தவறுதலாக ஒரு கருத்தை சொன்னால் அல்லது சரியாக சொல்லும் கருத்தை திரித்து சொல்லி அவருக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுக்க தீவிரமாக போராடும் தமிழ் போராளிகள், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மக்களுக்காக இன்னும் ஒரு குரலை கூட கொடுக்கவில்லையே ஏன்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்..

அமீர், சீமான், மன்சூர் அலிகான், பாரதிராஜா, வேல்முருகன், கருபழனியப்பன் உள்ளிட்ட தமிழ் போராளிகள் ஐபிஎல் போட்டிக்கு காட்டிய தீவிரத்தை கஜா புயல் பாதித்த மக்களிடம் ஏன் காட்டவில்லை என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரசுக்கு எதிராக இவர்கள் போராடுகிறார்கள் என்பதைவிட எதில் போராட்டம் செய்தால் விளம்பரம் கிடைக்கும் என்பதை எண்ணியே போராட்டம் நடத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. ரஜினி கூறியதை திரித்து கூறினால் தலைப்பு செய்தியாக வரும், ஆனால் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று நிவாரண உதவி செய்தால் பெட்டி செய்தியில் வருவது கூட சந்தேகம் என்பதால் தான் இந்த பாரபட்சம் என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.