செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (19:01 IST)

2.0 - வை தவிர்த்து கஜா புயலுக்காக ரஜினி ரசிகர்கள் செய்த காரியம்! ரசிகன்னா இப்படி இருக்கனும்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வரும் நவம்பர் 29 ம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ள படம் 2.0. ஷங்கர் இயக்கியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.  
 
இந்த நிலையில் 2.0 படம் வெளிவருதை முன்னிட்டு அதை கொண்டாடுவதற்காக ரஜினி ரசிகர்கள்  பேனர், கட் அவுட் போன்ற செலவுகளுக்காக வைத்திருந்த  பணத்தை, கஜா  புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய திட்டமிட்டுள்ளனர்.
 
தமிழகத்தை புரட்டிப்போட்ட கஜா புயல் விவசாயிகளுக்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
அதை கருத்தில் கொண்டு ரஜினி ரசிகர்கள் இந்த நல்ல முடிவை எடுத்துள்ளனர். இதனால் இம்மன்றங்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. 
 
மேலும் இம்மன்றத்தினரே நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய உள்ளனர்.