திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 19 நவம்பர் 2018 (19:57 IST)

கருணாநிதி வீட்டை சூறையாடிய கஜா புயல்...

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பூர்விக வீடு திருவாரூரில் உள்ளது. அங்குதான் கருணாநிதி பிறந்து வளர்ந்தார். ஆனால் இப்போது கஜா( யானை) புயலானது பலநூறு வருட பாரம்பரியமுள்ள வீட்டை பலமாக தாக்கியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களை தாக்கியுள்ள இந்த அசுர கஜா குறிப்பாக டெல்டா மாவட்டங்களை கடுமையாக தாக்கியுள்ளது.
 
திருவாவூர் மாவட்டத்திலுள்ள திருக்குவளை கிராமத்தில் மறைந்த முன்னாள் முதலிவர் மற்றும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பூர்விக வீட்டை கஜா புயல் பலமாக தாக்கியுள்ளதால் இவ்வீட்டை பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் பரவியது.
இதனையடுத்து இச்செய்தியை கேள்விபட்ட மு.க.அழகிரி தான் அந்த வீட்டை பராமரிக்க போவதாக கூறியுள்ளார் என்று செய்திகள் வெளீயானது.
 
இந்நிலையில் அழகிரியே விரையில் இங்கு வந்து நேரில் பட்டு வீட்டை சரிசெய்ய புயல வேகத்தில் கிளம்பி விட்டார் என தெரிவிக்கிறார்கள்.