1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 ஜூலை 2021 (20:44 IST)

பள்ளிகள் திறப்பது எப்போது? மக்கள் கேள்வி

இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் முதல் கொரொனா வைரஸ் பரவல் அதிகரித்ததை அடுத்து, இந்தியா முழுதுவதும்  ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

இந்த வருடம் தொடக்கத்தில் பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ஒட்டி வகுப்புகள் தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை பரவலை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக கற்பிக்கப்படு வருகிறது.

சமீபத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. பின்னர் மாணவர் சேர்க்கையும் நடைபெற்று முடிந்தது. தனியார் பள்ளிகளில் 75,725 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.  அரசுப் பள்ளிகளில் சுமார் 2,04, 379 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்நாண்டு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் எனக் கேள்வி எழுந்துள்ளது. தற்போது பள்ளிகள் தொடங்கப்படவில்லை என்றாலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.