தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!

Prasanth Karthick| Last Modified புதன், 14 ஜூலை 2021 (08:57 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனையில் ஈடுபட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் இருந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வரும் சூழலில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே படித்து வருகிறார்கள். சமீபத்தில் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நாளை மறுநாள் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் அளிக்கப்படும் அறிக்கையை பொறுத்து அவர் பள்ளி திறப்பது குறித்து முடிவெடுப்பார் என கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :