திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 11 ஜூலை 2021 (12:13 IST)

குறைந்தது கொரோனா; புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு! – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக புதுச்சேரியில் கடந்த பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத சூழல் உள்ளது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் கொரோனா குறைந்து வருவதால் வரும் 16ம் தேதி முதல் முதற்கட்டமாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.