பள்ளிகள் எப்போது திறப்பு ? முதல்வர் பழனிசாமி பதில் !

sinoj| Last Modified சனி, 8 ஆகஸ்ட் 2020 (19:49 IST)

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளாக் கடந்த மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தேர்வுகள் நடைபெறாததால் பல மாநிலங்கள் பள்ளி மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து பள்ளிகள் எப்போது திறக்கபடும் என்பது தெரியாத நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில்
தமிழகத்தில் எப்போது பள்ளிகள் தொடங்கும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக முதல்வர் கூறியுள்ளதாவது :


இந்தியா முழுவதிலும் உள்ள நிலைமையை
கவனித்து நிலைமை சீராகும்போது, பள்ளிகளிகள் திறக்கப்படும்
என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :