வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (13:39 IST)

ஓடி ஒளியும் எஸ்.வி.சேகருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் பழனிசாமி

ஏதாவது ஒன்றைச் சொல்லிவிட்டு வழக்கு என்று வந்தால் ஓடி ஒளிந்துகொள்ளும் எஸ்வி சேகருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் அதிமுக கொடி குறித்து எஸ்வி சேகர் விமர்சனம் செய்ததும், அதனை அடுத்து அதிமுக எம்எல்ஏவாக இருந்த போது வாங்கிய சம்பளத்தை எஸ்வி சேகர் திருப்பித் தருவாரா? என அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் எஸ்வி சேகர்-ஜெயக்குமார் மோதல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ’எஸ்வி சேகர் ஏதாவது பேசி விட்டு வழக்கு என்று வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் என்றும், அதனால் அவர் கேட்டதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார் 
 
மேலும் எஸ்வி சேகர் எந்த கட்சியில் இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவர் அதிமுகவில் இருந்த போதே நாங்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் போது ஒரு நாள் கூட எங்களுடன் பிரச்சாரத்திற்கு வந்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார்
 
ஒரு கருத்தை தெரிவித்து விட்டு அந்த கருத்தால் பிரச்சனை ஏற்படும் போது ஓடி ஒளிந்துகொள்ளும் எஸ்வி சேகரை கண்டுகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது