1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Religious spots can be opened Edappadi Palanisamy announces Lockdown relaxations

சென்னை வழிபாட்டு தலங்கள் திறப்பு: அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட எடப்பாடியார்!

தமிழகம்
சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஏழு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் இந்த ஏழாம் கட்ட ஊரடங்கில் ஒரு சில கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில் இந்த ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் ஒன்று ஜிம்கள் திறக்க அனுமதிக்கப்படும் என்பது தான். சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் ஜிம்கள் திறக்கலாம் அறிவித்தார். 
 
இதனைத்தொடர்ந்து தற்போது, சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்கள் வரும் 10 ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படும் என அறிவித்துள்ளார். 
 
கோயில்களை திறக்க சென்னை மாநகராட்சி ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில் ஆட்சியரிடமும் அனுமதி பெற வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவு பிறபித்துள்ளது. அதோடு, தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
தனிமையில் இளம்பெண், காத்திருந்து காய் நகர்த்திய ஆட்டோ டிரைவர்