1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 29 மார்ச் 2024 (17:27 IST)

வாசனின் தமாகாவுக்கு என்ன தகுதி இருக்கிறது..! அமைச்சர் பொன்முடி சரமாரி கேள்வி..!!

Ponmudi
தமாகா கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது குறித்து அந்த கட்சிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பி உள்ளார்.
 
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   விழுப்புரம் மற்றும் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க, விழுப்புரம் வரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
 
இந்தியத் தேர்தல் ஆணையம் சின்னம் வழங்குவது தொடர்பாக வெளியிட்ட அறிவுறுத்தலின்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது என்றும் பொன்முடி தெரிவித்தார்.
 
மேலும், தமாகா கட்சிக்கு என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்பி அவர்,  சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளார்களா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் வைத்து உள்ளார்களா? ஆனால் ஜி.கே.வாசன் தமாகா கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது என்று விமர்சித்தார்.
 
அதே போன்றுதான், தினகரனின் அமமுக கட்சிக்கும் குக்கர் சின்னம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

 
இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடுமோ, முதலமைச்சர் ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட இக்கூட்டணி வெற்றி பெற்று விடுமோ என்கிற அச்சத்தில், சின்னங்களை வழங்கும் விஷயத்தில் பாஜக அரசு தேர்தல் ஆணையம் மூலமாக காய்களை நகர்த்தி வருகிறது என்று அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டினார்.