சின்னம் என்னவென்றே தெரியாமல் குழப்பத்தில் தொண்டர்கள்: என்ன செய்ய போகிறார் துரைவைகோ?
திருச்சி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான மதிமுக வேட்பாளராக துரை வைகோ போட்டியிடும் நிலையை அவரது சின்னம் என்ன என்ற இன்னும் தெரியாமல் தொண்டர்கள் குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு திருச்சி தொகுதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தொகுதியில் மதிமுக, நாம் தமிழர் கட்சி, மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றனர்
இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் முடிவடைந்து 38 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் கருப்பையா இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு சூறாவளி ஆக பிரச்சாரம் செய்து வருகிறார்
ஆனால் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்காததால் திருச்சியில் உள்ள மதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் எந்த சின்னத்தில் வாக்கு கேட்பது என்று தெரியாமல் விழித்து வருகின்றனர்
திமுக அறிவுறுத்தியும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என துரை வைகோ உறுதியாக இருப்பதை அடுத்து நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போது தான் துரை வைகோவுக்கு என்ன சின்னம் என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது
அநேகமாக அவருக்கு தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஒரு புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வது கடினம் என்பதால் துரை வைகோவின் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளதாக மதிமுக தொண்டர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran