வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 நவம்பர் 2024 (14:15 IST)

இன்று மாலை 4 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் தட்பவெப்ப நிலை குளிர்ச்சியாக மாறி உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து, இருந்த நிலையில் சென்னை உள்பட அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்னும் ஒரு வாரத்திற்கு மழை இல்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருந்தார்.
 
இந்த நிலையில் இன்று மாலை நான்கு மணி வரை 16 மாவட்டங்களில் வீடு மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும், இந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva