1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy Rainfall Warning for 23 Districts in Tamil Nadu

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கொட்டப்போகுதி கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Tamil Nadu
தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணி வரை ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சற்று முன், சென்னை உள்பட 23 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பகல் ஒரு மணி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.


Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?